ஜி வி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கியுள்ள ‘ஐங்கரன்’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆஹா தமிழ் தளத்தை துவங்கி வைத்தார். மேலும், ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னணிக் கலைஞர்களுக்கு கௌரவம்…
ஆஹா தமிழ் தளத்தின் துவக்க விழாவில், தமிழ் சினிமாவின் நாயகர்கள் S.P.முத்துராமன், பாரதிராஜா, தெய்வத்திரு AV மெய்யப்பன், தெய்வத்திரு கே பாலசந்தர், தெய்வத்திரு M.S.விஸ்வநாதன் அவர்கள்,தெய்வத்திரு SP பாலசுப்ரமணியம், மற்றும் தெய்வத்திருமதி ஶ்ரீதேவி ஆகியோருக்கு, அவர்களது தமிழ்சினிமா அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் “ கலைஞர் பெருமை” என்ற விருதை தமிழக முதல்வர் மற்றும் ஆஹா முதன்மை நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர்.
செல்ஃபி, ஐங்கரன்…
ஆஹா தளத்தின் தமிழ் வெளியீட்டின் அறிவிப்பை பற்றி, பிரோமோட்டர், ஆஹா நிறுவனம் திரு. அல்லு அரவிந்த் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகளைக் கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எங்கள் தமிழ உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராக உள்ள எங்களது தமிழ் உள்ளடக்கங்கள், இயக்குனர் வெற்றிமாறன் உடைய பேட்டைக்காளியுடன், பிரியாமணி நடித்துள்ள பாமா கலாபம், அம்முச்சி 2, ரமணி vs ரமணி 3 என மிகப்பெரிய வரிசை உள்ளது. தியேட்டரில் வெளியான ஜீவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடித்துள்ள செல்ஃபி, ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன், கார்த்தி நடித்துள்ள சர்தார், வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என பெரிய திரைப்படங்களும் வரிசையில் உள்ளது” என தெரிவித்துள்ளார். செல்ஃபி திரைப்படம் ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதுபோலவே ஐங்கரன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அதன் பின்னர் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வரிசையில் அடுத்து திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ள ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன், கார்த்தி நடித்துள்ள சர்தார் படங்களும் தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளன.
ஐங்கரன் டிரைலர்….
மேலும் இந்த நிகழ்வில், ஈட்டி திரைப்பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலர் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த டிரைலருக்கு பிறகு ஐங்கரன் மற்றும் செல்ஃபி படக் குழுவினர் இணைந்து மேடையில் தோன்றினர்.
ஆஹா தமிழ் சந்தா….
2020-ல் தெலுங்கில் துவங்கிய ஆஹா பயணம், ஒரு மில்லியன் சந்தாதாரர்களை ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே பெற்று, அதன் அற்புதமான பயணத்தை துவங்கியது. ஆஹா தமிழுக்கான ஆண்டு சந்தா பார்வையாளர்களுக்கு மலிவு விலையான ரூ.365க்கு கிடைக்கிறது, அதாவது ஒரு நாளைக்கு 1 ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.