www.garudavega.com

திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த பட டைட்டில்.. மாஸ் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர். இதனைத் தொடர்ந்து, இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், கடந்த ஆண்டின் பிளாக்பாஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறி இருந்தது.

After Thiruchitrambalam success Mithran Jawahar Ariyavan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "'LEO'-னு டைட்டில் வைக்க இதான் காரணம்".. வசனகர்த்தா கொடுத்த செம்ம தகவல்..!

அதே போல, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் நான்காவது முறையாக மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்திலும் தனுஷ் நடித்திருந்தார். மேலும் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். திருச்சிற்றம்பலம் திரைப்படம், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு ஃபீல் குட் படமாக உருவாகி இருந்த சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த படத்தை ரசிக்கவும் செய்திருந்தனர்.

After Thiruchitrambalam success Mithran Jawahar Ariyavan

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று  (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் பணிகளை மா.தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவை கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம்.ஜி.பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.

After Thiruchitrambalam success Mithran Jawahar Ariyavan

Images are subject to © copyright to their respective owners.

முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read | விஜய் நடிக்கும் 'LEO'.. காஷ்மீரில் இருந்து லீக் ஆன வீடியோவுக்கு தயாரிப்பாளரின் பரபர RETWEET!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Thiruchitrambalam success Mithran Jawahar Ariyavan

People looking for online information on Mithran Jawahar Ariyavan, Thiruchitrambalam will find this news story useful.