பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் Nepotism எனப்படும் நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு திரைப்படங்கள், விளையாட்டுத்துறை ஆகியவற்றில் பலவருடங்களாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுஷாந்த்தின் மரணத்தையடுத்து இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த விவகராத்தில் தற்போது பாலிவுட் பிரபலங்களான இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், நடிகைகள் ஆலியா பட், சோனம் கபூர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும், கரண் ஜோகரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் வரை குறைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.