நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி தென்னிந்திய திரையுலகையும் அவரது ரசிகர்களையும் உலுக்கியது.
அவருக்கு கர்நாடக அரசுமுறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. 46 வயதான புனித் ராஜ்குமார், உடற்பயிசி செய்துகொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனை சென்றார். அதன் பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
புனித் ராஜ்குமாரின் மரணத்துக்கு பின்னர் பலரும் இளம் வயதிலேயே நெஞ்சுவலி ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பலரும் இருதய நோய் தொடர்பான பரிசோதனைக்காக பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பொது விடுமுறையான ராஜ்யோத்சவா தினத்தையொட்டி நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் என இளைஞர்களும், வயதானவர்களும் கார்டியாலஜி தொடர்பாக மருத்துவமனையை நோக்கி படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி அவசர அறை, OPD ECG, எக்கோ கார்டியோகிராம், TMT சோதனைகள், ட்ரோபோனின், கரோனரி CT ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கத்தை விடவும் 3 மடங்கு மக்கள் பரிசோதனைக்காக வந்ததாகவும் கூறப்பட்டது.
Also Read: புனித் Hospital-க்கு நெஞ்சுவலியில் கிளம்பிய பரபரப்பு Video.. வெளியான CCTV காட்சிகள்!