www.garudavega.com

எல்லா பெண்களும் சந்திக்கிற பிரச்சனை இது தான்- கெத்து காட்டும் ஆர்யா மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை பிறந்த பின் சாயிஷா எப்படி உடல் எடையை குறைத்தார் என்பதை பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.  நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷாவுக்கு, கடந்து 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

 

After Pregnancy Weight loss tips shared by Actress Saayeesha

எப்போதும் பெண்கள் குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை கூடுவர். அந்த சமயத்தில் உடல் பருமனை குறைக்க பல முயற்சிகள் எடுப்பது வழக்கம். அதில் பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, நடிகைகள் தங்களின் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில், சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா, எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.

After Pregnancy Weight loss tips shared by Actress Saayeesha

அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை, தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருவார். குழந்தை பிறப்புக்கு பிறகு தான் உடல் எடை குறைத்த ரகசியத்தையும், அதை பற்றிய சில குறிப்புகளையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். நாம் எவ்வளவு தொடர்ச்சியாக மற்றும் தீவிரமாக பயிற்சி செய்கிறோமோ அப்போது தான் இது சாத்தியமாகும். மேலும் முடியாத காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப கடினம். ஆகையால் முடியவில்லை என்றால், அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.

After Pregnancy Weight loss tips shared by Actress Saayeesha

எல்லாப் பெண்களும் அவரவர் பார்வையில்  அழகுதான். அதில் நாம் ஒல்லியான உடல் அமைப்பில் இருக்கும் போது அதன் பயன் என்னவென்றால் அது தேவையில்லாத கொழுப்பை குறைத்து விடும். நம்முடைய குறிக்கோள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே. மேலும் இவை அனைத்திற்கும் நிச்சயமாக ஒரு நேரம் காலம் கண்டிப்பாக தேவைப்படும். மற்றவரைப் பார்த்து அவர்கள் மாதிரி ஆக வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுடைய உடல் வேறு, உங்களுடைய ஆரோக்கியம் வேறு. அதனால் அதற்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை நான் பதிவிட காரணம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே எனது ஸ்டைல், இது தான் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.

எல்லா பெண்களும் சந்திக்கிற பிரச்சனை இது தான்- கெத்து காட்டும் ஆர்யா மனைவி! வீடியோ

Tags : Arya, Saayeesha

மற்ற செய்திகள்

After Pregnancy Weight loss tips shared by Actress Saayeesha

People looking for online information on Arya, Saayeesha will find this news story useful.