சென்னை, 17, பிப்ரவரி 2022: 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி.
கைதி கதை..
இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக நல்ல வசூலை குவித்தது. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முன்னாள் கைதியான கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை எப்படி காப்பாற்றியது எப்படி என்பது த்ரில்லராக சொல்லப்பட்டிருக்கும். இதன் கிளைக்கதைகளுள் ஒன்றாக, விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும் கைதியான கார்த்தி பார்க்க வரும் படலமும் இடம் பெறும்.
Also Read: தனுஷ்-உடன் ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் இளம் பெண் யாரு? வைரல் ஃபோட்டோவின் பின்னணி!
கைதி திரைப்படம்
எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார். இதனிடையே கைதி படம் ஜப்பானிய மொழியில் 'கைதி டில்லி' என்கிற பெயரில், வரும் நவம்பர் 19, 2021 அன்று ஜப்பானில் திரைக்கு வர உள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.
ஜப்பானில்...
ஜப்பானில் நடிகர் கார்த்தியின் முதல் படமாக இந்த படம் வெளியாகும் நிலையில், ஹீரோசிமா நகரில் உள்ள திரையரங்கங்களில் இதற்கான விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த பரபரப்பு ரசிகர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணி அடங்குவதற்குள் அடுத்த மாஸ் அறிவிப்பு கைதி படம் தொடர்பாக வந்துள்ளது.
இந்தியிலும் ரீமேக்
ஆம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து, வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும், தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. இதனிடையே தெரிவிக்கப்பட்டுள்ள புதிய தகவலின்படி, தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது.
ரஷ்ய மொழியிலும்
அதன்படி, கைதி திரைப்படம் ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.