பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விறுவிறுப்பான டாஸ்குகளுடன் களைகட்டி வருகிறது.
தற்போது வீட்டுக்குள் உருவபொம்மையை உடைக்கும் டாஸ்க் மூலம், இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி வைக்கப்படது. அதாவது, பிக்பாஸ் வீட்டுக்கு தலைவராக வேண்டாம் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள், தாங்கள் கருதும் ஒருவரின் உருவபொம்மை உடைக்கலாம்.
இந்த உருவபொம்மை மீது, ஒரு பானையும், குறிப்பிட்ட போட்டியாளரின் படமும் இருக்கும். இதனிடையே ஒவ்வொரு போட்டியாளரும் உருவபொம்மையை உடைக்கும்போகும் முன்பு, அருகில் இருந்த பிற போட்டியாளர்கள், உருவபொம்மையை உடைக்க தயாராக நிற்கும் அந்த குறிப்பிட்ட நபரிடம், தங்களது பொம்மயை உடைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் அதற்கான நியாயமான காரணங்களையும் அவர்கள் கூறி, தாங்கள் கேப்டனாக விரும்புவதையும், அவ்வாறு கேப்டன் ஆனால், என்னவெல்லாம் தங்களால் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்ய முடியும் என்று சொல்லியும் கன்வின்ஸ் செய்தனர்.
எனினும் இறுதியாக யாருடைய பானையை உடைக்க வேண்டும் என்பதை போட்டியாளர்கள் முடிவெடுப்பார்கள். அதில் பானையை உடைக்கப் போனவர்களிடம் பிரியங்கா பேசும்போது, “அக்ஷராவுக்கு கமாண்டர் வேலை கொடுத்தும் அக்ஷரா என்ன பண்ணாங்கனு தெரியல.. எனவே நான் கேப்டனாகும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்!” என்று பேசி கன்வின்ஸ் செய்தார்.
மேலும், நிரூப், அபினய், வருண் உள்ளிட்ட பலரும் தனக்கு ஒரு சான்ஸ் வேண்டும் என்று பானையை உடைக்க போனவர்களிடம் கேட்டுக்கொண்டனர். கடைசியாக பிரியங்காவின் பானையை உடைத்த இமான் அண்ணாச்சி, அபினய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பதாக சொல்லி, அபினயின் உருவ பொம்மையை உடைக்காமல் விட்டார். இதனை அடுத்து அபினய் அந்த வீட்டுக்கு கேப்டன் ஆனார்.
ஆனால் இசைவாணி, நிரூப் இருவரும் தத்தம்மிடம் இருக்கும் காயினை கொண்டு, பிக்பாஸ் வீட்டுக்கு கேப்டனாக விரும்புவதாக பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே பாவனி பிக்பாஸ் வீட்டுக்கு கேப்டனாக இருக்கிறார் என்பது ஒருபுறம் இருக்க, இந்த டாஸ்க் மூலமாக யார் இன்னொரு கேப்டனாக போகிறார்கள் என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அப்போது ராஜூ, இமான் உள்ளிட்ட பலரும், இசைவாணியிடம், “நீ கேப்டன் ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால், நாங்கள் உன் பொம்மையை உடைத்திருப்போமே? உனக்குள் இந்த எண்ணம் இருந்ததே தெரியவில்லை. உன்னிடம் ஏற்கனவே காயின் இருக்கிறது. நீ நாமினேஷனில் வந்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும். அத்துடன் நீ ஏற்கனவே கேப்டனாக இருந்திருக்கிறாய்” என்று கூறினர்.
ஆனால் இதற்கு மீண்டும் டென்ஷனான இசைவாணி, தனக்கு கேப்டனாக விருப்பம் இல்லை என மீண்டும் கூற, இறுதி முடிவை பிக்பாஸ் கேட்க, இசைவாணி, தான் கேப்டனாக விரும்புவதாக கூறினார். அதை ஏற்ற பிக்பாஸ், “அடுத்த ஒரு வாரத்துக்கு ஹவுஸ்மேட்ஸ், ரிங் பெல் அடித்தால் அவர்களுக்கு நீங்கள் தான் சர்வ் பண்ண வேண்டும்!” என்று இசைவாணியிடம் கூறிவிட்டார். அவ்வளவுதான் டீ, காபி என வெரைட்டி வெரைட்டியாக ஹவுஸ்மேட்ஸ், பெல் அடித்து, அடித்து இசைவாணியிடம் ஆர்டர் பண்ண தொடங்கிவிட்டனர்.