www.garudavega.com

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதியான நிலையில், ஐஸ்வர்யா ராயின் டெஸ்ட் முடிவுகள் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதித்துள்ளதாக  இருவரும் தங்களது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டனர். இந்த சம்பவம் நாடு பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் நலம் பெற வேண்டி பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிராத்தனை செய்வதாக தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா மற்றும் வீட்டுப்பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் , ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா பாதித்துள்ளது என பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Amitabh Bachchan, Abhishek, Aishwarya Rai and Aradhya Corona test result | அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு பிறகு ஐஸ்வர்யா ராயின் கொரோனா டெஸ்

People looking for online information on Abhishek Bachchan, Aishwarya rai, Amitabh Bachchan, Coronavirus will find this news story useful.