www.garudavega.com

ADK அப்பாகிட்ட ஷிவின்-ஐ போட்டு கொடுத்த அமுதவாணன்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

ADK father about shivin to amudhavanan bigg boss house

Also Read | கதிரவனுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்த Guest.. மனுஷன் நம்பவே இல்லையே.. நெகிழ்ச்சி தருணம்

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

ADK father about shivin to amudhavanan bigg boss house

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது. தற்போது விக்ரமனின் பெற்றோர் மற்றும் கதிரவனின் தாய் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.

ADK father about shivin to amudhavanan bigg boss house

இதனிடையே, பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்த ADK-வின் தாய் மற்றும் தந்தை ஆகியோர், அனைத்து போட்டியாளர்கள் குறித்து நிறைய சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். தங்களின் குடும்பத்தினரின் ஃபேவரைட் போட்டியாளர்கள் குறித்தும் அவர்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். பெற்றோர் முன்னிலையில், பாடல் ஒன்றையும் பாடி அசத்தி இருந்தார் ADK.

முன்னதாக, ஏடிகேவின் பெற்றோர் உள்ளே வரும் போது டீ போடவும் போட்டியாளர்கள் கேட்கின்றனர். அப்போது ஷிவினிடம் அமுதவாணன் அதை சொல்கிறார். இதனைத் தொடர்ந்து, ஷிவின் சரியாக டீ போட்டுக் கொடுக்க மாட்டார், ஆனால் வாராவாரம் கமல் சார் கிட்ட எல்லார பத்தியும் போட்டுக் கொடுப்பார் என்று ADK தந்தையிடம் அமுதவாணன் சொல்கிறார். ஆனால், ஷிவின் அப்படி ஒன்றும் இல்லை என்றும் அவர் எல்லா வேலைகளை செய்வதை நானே பார்த்து இருக்கிறேன் என்றும் ஏடிகேவின் தந்தை கூறுகிறார். தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஷிவினின் விளையாட்டை கவனித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "நல்லா விளையாடுறீங்க‌.. நீங்க போக மாட்டீங்க".. பிரபல போட்டியாளரிடம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ் .!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ADK father about shivin to amudhavanan bigg boss house

People looking for online information on ADK, ADK Father, Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.