www.garudavega.com

விக்ரமனா? அசிமா?.. ஏடிகே சொன்ன நச் பதில்.. "`டைட்டில் ஜெயிக்கவும் இவருக்கு தான் தகுதி இருக்கு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

ADK Chose between azeem and vikraman reason bigg boss

Also Read | "வனிதா வந்தா அன்பால கட்டி போடுவோம்".. விக்ரமன் சொன்ன Points.. ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன் இதுதான்

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனிடையே வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

ADK Chose between azeem and vikraman reason bigg boss

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

ADK Chose between azeem and vikraman reason bigg boss

இதனிடையே, உள்ளே வந்திருந்த விஜே பார்வதி, ஏடிகேவிடம் சில போட்டியாளர்கள் குறித்து கேள்விகளை நேருக்கு நேராக எழுப்பி இருந்தார். அதில், "விக்ரமனா?, அசிமா?" என கேட்க அதற்கு பதிலளித்த ADK, "விக்ரமன்" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விக்ரமனிடம் பிடிக்காத விஷயம் பற்றிய கேள்வியை பார்வதி எழுப்ப, இதற்கு பதிலளித்த ஏடிகே, "விக்ரமன்கிட்ட புடிக்காத விஷயம், சில நேரம் கொஞ்சம் கண்மூடித்தனமா ஷிவினுக்கு சப்போர்ட் பண்ணுவாருன்னு தோணும். மத்தபடி அவர் ஒரு நேர்மையான மனிதர். நல்ல குணம் படைச்சவர்.

இந்த வீட்டுல வந்த புதுசுல எனக்கு புடிக்காத ரெண்டு பேர் அசிமும், விக்ரமனும். இப்ப இந்த வீட்டுல எனக்கு ரொம்ப புடிச்சது விக்ரமன்னு சொல்லுவேன். இத்தனை நாள் பழக்கத்துல அவரோட கேரக்டரை ஒரு ஒரு நாள் நான் பாத்துட்டு வரேன். யார் மனசையும் புண்படுத்த மாட்டாரு. என்னை கேட்டீங்கன்னா டைட்டில் வின்னராக முழு தகுதி விக்ரமனுக்கு இருக்கு" என ஏடிகே விளக்கமளித்தார்.

Also Read | "அந்த பாட்டுக்கு தான் காலையில டான்ஸ் ஆடுனேன்".. RRR குறித்து ஷாருக் போட்ட ட்வீட்!!.. Trending!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ADK Chose between azeem and vikraman reason bigg boss

People looking for online information on ADK, Azeem, Bigg Boss Tamil 6, Vijay tv, Vikraman will find this news story useful.