ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | "Gender தனி மனிதர் தீர்மானிக்குறது, Fun பண்ண கூடாது".. மைனாவுக்கு விக்ரமன் அட்வைஸ்
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.
மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
இதனிடையே, புதிதாக நடைபெறுகிற டாஸ்க் இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். அத்துடன் இரண்டு பேராக பிரியவும் பிக் பாஸ் குறிப்பிடும் நிலையில், அனைத்து போட்டியாளர்களிடமும் தன்னுடன் இணைந்து மோதும் படி கோருகிறார் அமுதவாணன். ஆனால் ஆறு ஹவுஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிய அசிம் மட்டுமே பாக்கி இருக்கிறார்.
அசிம் வந்ததும் அவருடன் மோத தயங்கும் அமுதவாணன், இரண்டு பலமுள்ள போட்டியாளர்கள் முதல் சுற்றில் மோதுவது சரியாக இருக்காது என்றும் அசிமிடம் கூறுகிறார். அவருடன் ஆடுவது எனக்கு விருப்பமில்லை என்றும் அமுதவாணன் கூற, அசிமும் அதையே சொல்கிறார். தொடர்ந்து அசிமிடம் உரையாடும் அமுதவாணன், "இரண்டு பேரும் ஒரே அணியில் இருந்தால் முதல் சுற்றிலேயே பெரிய தலைகள் போகும். அது மற்ற அனைவருக்கும் எளிதாகி விடும்" என தெரிவிக்கிறார். இது சற்று விவாதம் ஆக, பிக்பாஸிடமே அணியை பிரித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தும் அசிம், "இங்க எல்லாரும் பலத்தை வெச்சு Safe-ஆ அவங்க டீம் எடுத்துக்குறாங்க" என அசிம் விமர்சனத்தை முன் வைக்கிறார்.
இதனைக் கேட்டதும் பேசும் ஏடிகே, "அந்த வார்த்தையை கொஞ்சம் Avoid பண்ணுங்க அசிம்" என தெரிவிக்க, நான் உன்னை குறிப்பிடவில்லை என்றும் அசிம் விளக்கம் கொடுக்கிறார். இதற்கு ஆவேசமாக பதில் சொல்லும் ஏடிகே, "நான் இங்க Safe கேம் ஆட வரல மச்சான். Safe கேம்ன்னு எல்லாம் சும்மா சொல்லாத அசிங்கமா இருக்கு. நான் என்ன Safe கேம் ஆடவா வந்திருக்கேன்?. மச்சான் வாடா நம்ம விளையாடுவோம். இல்ல அமுது வாங்க நம்ம விளையாடுவோம். நீ மட்டும் தான் ஒழுங்கா விளையாடுறியா அப்போ. மத்தவங்க எல்லாரும் Safe-ஆ விளையாடுறாங்களா?" என கூறியதும், ஏடிகேவை குறிப்பிடவில்லை என அசிம் மீண்டும் தெரிவிக்கிறார்,
அதே போல ஏன் கோபப்படுகிறாய் என ADKவிடம் அசிம் கேட்க, "நான் எடுத்துக்குவேன். என்னை இது பர்சனலா வேதனப்படுத்துது. எந்த நேரமும் நீ Safe கேம்ன்னு சொல்றே. நான் பலமில்லாம இல்ல மச்சி ஸ்ட்ராங்கா தான் இருக்கேன், ஆனா ஹெல்த் பிரச்சினைனால சொல்றேன். ஆனா நீ எப்பவும் அப்படி சொல்லாத. எல்லாரையும் அசிங்க படுத்துற மாதிரி இருக்கு" என ஏடிகே தெரிவிக்கிறார்.
இதற்கடுத்து Safe கேம் என அசிம் சொன்ன விஷயத்தை கதிரவன் உள்ளிட்டோரும் விமர்சனம் செய்து தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். இறுதியில், அசிம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் மோதுவதும் முடிவாகிறது.
Also Read | "நான் பூமர் கிடையாது, உங்க புரிதலே தப்பு".. Task-ல் அமுது கொடுத்த விருது.. விக்ரமன் ரியாக்ஷன்