ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | "பிக்பாஸ் வீட்ல இவங்களை ரொம்ப பிடிக்கும்".. வெளியேறிய பின் மனம் திறந்த ADK..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. இதனிடையே கடந்த வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

வெளியே சென்றிந்த ADK முன்னதாக தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் பயணம் குறித்து மனம் திறந்திருக்கிறார் ADK. இது தொடர்பாக நேரலையில் ADK-விடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, "உங்களுக்கு பிடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ADK,"விக்ரமன், அசீம், ராம் மற்றும் மணி" ஆகியோர் தனது விருப்பத்திற்கு உரிய போட்டியாளர்கள் என குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து அசீம் பற்றி பேசிய ADK,"அசீமை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அவருகிட்ட கேரிங் தன்மை இருக்கு. பிடிக்காத விஷயம் என்னன்னா ரொம்ப கோபப்படுவான். கத்தி பேசிடுவான். என்னை கத்தி பேசும்போது எனக்கு கோபம் வரும். ஆனா அதுக்கு அப்புறமும் நாங்க எங்க நட்பை தொடர முடிந்தது. வெளியே வந்த உடனே இது எதையும் பேசக்கூடாது. நம்ம வாழ்க்கையையும் நட்பையும் வளர்க்க முயற்சி பண்ணனும்-னு சொல்லுவான். கமல் சார் கேக்கும்போது கூட நாம சில முறை சொல்லிருப்போம். இந்த மாதிரி ஆளுங்க கூட பழகமாட்டோம்னு. ஆனா ஓப்பனா சொல்லனும்னா பழக்கக்கூடிய ஒரு ஆள் தான் அசீம்." என்கிறார்.
Also Read | நேத்து பண மூட்டை.. இன்னைக்கு பணப்பெட்டி.. முதல் தடவை Bigg Boss -ல நடந்த மாற்றம்..!