www.garudavega.com

“இது எப்ப?”.. தன் பட இயக்குநருடன் நடிகை திடீர் திருமணம் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கௌரவம் திரைப்படம் மூலம் அறியப்பட்டவர் நடிகை யாமி கவுதம். இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்தார். இதைத் தவிர, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்த யாமி கவுதம் குறிப்பாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

actress yami gautam marries director aditya dhar viral photos

தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் இந்தி படமான விக்கி டோனார் படம் மூலம் யாமி பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு முதல் படம் என்றாலும் முதல் படமே அவருக்கு வெற்றிபடமாக அமைந்தது. இதேபோல் தேசிய விருதுகளை வென்ற திரைப்படமான யுரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தில் பல்லவி சர்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார் யாமி.  இந்த படத்தை இயக்கியவர் தான் ஆதித்யா தார். இவரைத்தான் காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார் யாமி கவுதம்.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை இருப்பதால் யாரையும் அழைக்காமல் எளிமையாக நடந்த இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் யாமி கவுதம் வெளியிட்டுள்ளார். மேலும் அத்துடன் ஒரு போஸ்டையும் பதிவிட்டிருந்தார். அதில், “எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் இன்று நாங்கள் மணம் செய்து கொண்டோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினோம். புதிதாக துவங்கியிருக்கும் இந்த பயண நேரத்தில் உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் ஆதித்யா தாரை மணந்த நடிகை யாமி கவுதம்க்கு இவர்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.  அந்த வாழ்த்துக் குறிப்புகளில் யாமியும், ஆதித்யா தாரும் திருமணம் செய்துகொள்வீர்கள் என நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yami Gautam (@yamigautam)

எனினும் திருமண புகைப்படத்தில் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக காணப்படுகிறீர்கள். இதில் இருந்தே உங்கள் காதல் தெரிகிறது.  என்றும் சந்தோஷமாக இருங்கள் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்

Actress yami gautam marries director aditya dhar viral photos

People looking for online information on Yami Gautam will find this news story useful.