அரசியலில் இயங்கும் பெண்கள் குறைவு தான் என்றாலும், முன்னெப்போதும் இருந்த அளவினை விட தற்போது அரசியலில் பெண்கள் இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் அரசியலில் இயங்கி வருவதை போலவே நடிகைகளும் அரசியலில் முக்கிய பொறுப்புகளை ஏற்று பங்காற்றுவது உண்டு. அப்படித்தான் நடிகை விந்தியா அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமான அஇஅதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றிவருகிறார்.
இந்நிலையில் அவர மரணமடைந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள முன்பின் அறிந்திராத சில கட்சி ஆதரவாளர்களின் செயல்களுக்கு விந்தியா ட்விட்டரில் ரியாக்ட் செய்திருக்கிறார்.
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. pic.twitter.com/Zsie6obR86
— Vindhyaa (@vindhyaAiadmk) April 27, 2021
இதுகுறித்து தமது ட்விட்டரில் பேசியுள்ள விந்தியா உலகத்திலேயே தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களுள் தானும் ஒருவர் என்றும், ஆண்டவனை தவிர தனக்கு என்ட் கார்டு போட யாராலும் முடியாது ராசா என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ALSO READ: "குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நடத்தினார்!".. இயக்குநர் மறைவு.. ரம்யா பாண்டியன் உருக்கம்!