நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.
இந்நிலையில் இதுபற்றி பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் "நீதி நிறைவேற்றப்பட்டது" என்று கூறியிருந்தார். வரலக்ஷ்மி அந்த பதிவிற்கு கீழ் "உண்மையாகவே 7 வருடங்களுக்கு பிறகு நீதி நிறைவேற்றப்பட்டதாக நினைக்கிறீர்களா. குறைந்தது 6 மாதங்களுக்கு உள்ளாக இந்த மாதிரி வழக்குகளுக்கு நீதி வழங்க பட வேண்டும். பெண்கள் இம்மாதிரி குற்றங்களால் உயிரிழந்து கொண்டிருக்க, நாம் இத்தனை காலம் எடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்" என்று கூறியுள்ளார்
Do you honestly think justice was severed after 7 years??? Don’t you think it’s time sir that we enforce #deathpenaltyfornrape within atleast 6months of the crime.?? Do you think it’s fair that women lose their lives to this crime and we take so long to give them justice?? https://t.co/T04TokKDTX
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) March 20, 2020