தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் உள்ளது.
சாமி, கில்லி, கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அதே போல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் வெளியாகி இருந்தது.
கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். பிளாக்பாஸ்டர் படமாக மாறி இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக ராங்கி திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தார்.
முன்னதாக ராங்கி என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர் சரவணன், "ராங்கி என்றால் திமிராக இருப்பது தான். இந்த கேரக்டரை அப்படி தான் எழுதி இருப்பேன்" என்று பதில் கூறினார். மறுகணமே பேசிய த்ரிஷா, "ஆமாமா நிஜ வாழ்க்கையில கொஞ்சம் ராங்கி தான். இதுனால அவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணல. ஆனா இது கொஞ்சம் Different. கொஞ்சம் திமிரு இருக்கு. அதுனால கொஞ்சம் தப்பான வழில கூட போகலாம்ல. அது கூட காண்பிச்சு இருக்காங்க. இது ரொம்ப Perfect கேரக்டர் இல்ல. ஆண், பெண் யாராக இருந்தாலும் PERFECT ஆக இருக்க முடியாது. கொஞ்சம் Imperfectionஆ இருப்பாங்கல்ல. இந்த கேரக்டர் ரொம்ப புடிச்சு இருந்துது" என கூறினார்.