நடிகர் விவேக் காலமான செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்ன கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விவேக், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளை பெற்றுள்ள சிறந்த சமூக ஆர்வலரும் ஆவார்.
தற்போது வெளிவந்த தகவலின் படி, காவல்துறையின் குண்டுகள் முழங்க தமிழக அரசு கொடுக்கும் அரசு மரியாதையுடன் நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு, எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மறைவின்போதும் இதே போன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், பொதுமக்களுடன், பல திரைத்துறை பிரபலங்கள் நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜய்யின் குருவி போன்ற படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தார் நடிகை திரிஷா.