கன்னட திரையுலகில் பலர் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் அதிர்ச்சி புகாரை முன்வைத்தார். மேலும் அப்படி பயன்படுத்துவார்கள் என்று 15 பேர் கொண்ட ஒரு லிஸ்டை குறிப்பிட்டார். இந்நிலையில் 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி பெயரும் அந்த லிஸ்டில் இருந்தது.
இந்நிலையில் அதிகாரிகள் ராகினி திவேதி இல்லத்தில் சோதனையை தொடங்கினர். ஆறு ஆண் மற்றும் ஒரு பெண் போலீஸ் என அவரது வீட்டில் போதை பொருள் இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள். இதனையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
முன்ஜாமீன் கேட்டு நடிகை பெங்களூரு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்த நிலையில். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடுமையான முதுகுவலி காரணமாக மூன்று நாட்களில் ஒருநாள் மட்டுமே அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும், மேலும் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும், சிசிபி போலீசார் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவரது மொபைலில் இருந்த மெசேஜ் மற்றும் போன் கால்களை டெலிட் செய்தார் என்றும் அவர்கள் புகார் எழுப்பினர். இதனையடுத்து விசாரணை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகையின் தரப்பு இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.