கணவரை டைவர்ஸ் செய்யப்போகிறாரா 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி ? - அவர் வெளியிட்டுள்ள வீடியோவ பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிக்குமார் இயக்கி நடித்த 'சுப்ரமணியபுரம்' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. அந்த படமும், அந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் பாடலை அவ்வளவு எளதில் ரசிகர்களால் மறந்திருக்க முடியாது.

Actress Swathi Reddy reacts with a video to her divorce news | டைவர்ஸ் செய்துகொள்ளப்போதாக வெளியான செய்திக்கு சுவாதி வீடியோ மூலம் ப

'போராளி', 'இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'வடகறி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஸ்வாதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் தனுஷ் நடித்திருந்த 'யாராடி நீ மோகினி' பட ஒரிஜினல் வெர்ஷனை தெலுங்கில் செல்வராகவன் 'ஆடவரி மாடலேகு அர்த்தாலு வேறுலே; என்ற பெயரில் இயக்கியிருந்தார். அந்த படத்தில் தமிழில் சரண்யா மோகன் செய்த வேடத்தில் ஸ்வாதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

நடிகை ஸ்வாதி கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்வாதி தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும், அதனால் அவரது திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம் என்று செய்திகள் வெளியானது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஸ்வாதி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது திருமண புகைப்படங்களை ஹைட் பண்ணி வைத்திருப்பதையும் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை விளக்கும் விதமாக அது உள்ளது.  அந்த பதிவில் ஹாரிப்பார்ட்டரும் டாபியும் பேசிக்கொள்வது போன்ற உரையாடலை பதிவு செய்துள்ளார்.

Entertainment sub editor

Actress Swathi Reddy reacts with a video to her divorce news | டைவர்ஸ் செய்துகொள்ளப்போதாக வெளியான செய்திக்கு சுவாதி வீடியோ மூலம் ப

People looking for online information on Subramaniapuram, Swathi Reddy will find this news story useful.