கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதன்பிறகு வம்சம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த சுனைனா அதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
பின்னர், மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் சுனைனா நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் சுனைனா நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடிகை சுனைனா அளித்திருக்கிறார். இதில், சினிமா குறித்து மிகவும் ஜாலியாக பல்வேறு விஷயங்களை பற்றி பேசி இருந்தார் சுனைனா.
காதலில் விழுந்தேன் சுனைனா
காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான சமயத்தில் அந்த படங்களின் ப்ரோமோக்கள் அடிக்கடி டிவியில் ஒளிபரப்பானது குறித்தும், அதை பார்ப்பவர்கள் தன்னிடம் என்னென்ன பேசினார்கள் என்பது பற்றியும் நடிகை சுனைனா மிக ஜாலியாக பகிர்ந்து கொண்டார். அதே போல தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு சில நிமிடம் வரும் காட்சியில் நடித்ததற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அவர் பேசி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
வேணாம்ன்னு சொன்ன படம்
மேலும் இந்த பேட்டிக்கு நடுவே, "சில படங்களோட வாய்ப்பு வந்திருக்கும். அந்த டைம்ல வேண்டாம், வேண்டாம்னு சொல்லி இருப்பீங்க. வேற யாராவது நடிச்சு அது செமையா போயிட்டு இருக்கும். இல்லன்னா அந்த கேரக்டர் பயங்கரமா ரிஜிஸ்டர் ஆகி இருக்கும். அப்படி ஏதாச்சும் கேரக்டர்ஸ் இருக்கா உங்களுக்கு?" என்ற கேள்வியை நெறியாளர் முன் வைத்தார்.
Images are subject to © copyright to their respective owners
இதற்கு பதில் அளித்த நடிகை சுனைனா, "நான் ஒரு டைம்ல ஒரு படம் ரிஜெக்ட் பண்ணி இருக்கேன். அந்த படம் வந்து, 'வேணாம் பண்ண கூடாது' அப்படின்னு நான் ரிஜெக்ட் பண்ணல. ஆனா அந்த சூழ்நிலையில வேணாம்னு சொன்னேன். அந்த படம் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆச்சு. அது அப்ப சூப்பர் ஹிட் ஆன படம், அது என்ன படம்ன்னு நான் சொல்லல. நிறைய கேரக்டர்ஸ் அந்த படத்தில் இருந்தாங்க.
ஐயோன்னு இருந்துச்சு எனக்கு..
அதுல வந்து எனக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தாங்க, உங்களுக்கு என்ன கேரக்டர் தோணுதோ அது நீங்க பண்ணலாம் அப்படின்னு சொன்னாங்க. என்னோட வாழ்க்கையில அப்ப நிறைய விஷயங்கள் போயிட்டு இருந்ததுனால அந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருந்துச்சு. அதுக்கப்புறம் அந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம் 'ஐயோ' அப்படின்ற மாதிரி ஒரு ஃபீலிங் இருந்துச்சு. நான் கொஞ்சம் மோசமாக உணர்ந்தேன்" என தெரிவித்தார்.