'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சோனா. அதனைத் தொடர்ந்து 'ஷாஜகான்', 'குசேலன்', 'கோ' உள்ளிட்ட படங்களின் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
இந்நிலையில் தற்போது சோனாவிடம் இருந்து தன்னை பற்றி எழும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நான் எங்கே இருக்கிறேன், நான் ஏன் அதிகம் படங்கள் நடிப்பதில்லை, பார்ட்டிக்கு ஏன் செல்வதில்லை என்ற கேள்விகளை எதிர்கொள்கிறேன். இது அவர்களுக்கு சம்மந்தம் இல்லாதது.
இருப்பினும் என் மேல் உண்மையில் அக்கறை உள்ளவர்களுக்கு, நான் எங்கும் போகவில்லை, நான் இந்த வருடம் நான்கு படங்களில் நடித்துள்ளேன். ஆனால் 12 படங்கள் வரை நடிக்க மறுத்துவிட்டேன்.
நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். நான் முன்பு போல் இல்லை. எனது மனநிலை முதிர்ச்சி அடைந்து விட்டது. உங்கள் அக்கறைக்கு நன்றி. 2020 ஆம் வருடம் சிறப்பான வருடமாக அமையும் என எதிர்பார்க்கிறேன் என்றார். மேலும், என் நடிப்பில் சேஸிங், பரமபத விளையாட்டு, அசால்டு, தேடுதல், பச்ச மாங்க உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன'' என்று அதில் தெரிவித்துள்ளார்.