தமிழில் மச்சி, சுட்ட பழம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் சுபா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமன் பில்லவா என்பவரை திருணம் செய்து கொள்ளவிருப்பதாக புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நான் சுமந்த் பில்லவா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி.
லாக்டவுன் முடிந்த பிறகு டிசம்பரில் எங்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். சுபாவும் சுமந்த்தும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.