நடிகை சத்யப்ரியா தமிழில் 70களில் இருந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளில் நடித்துள்ள நடிகை சத்யப்ரியா, தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டர்களில் நடித்தும் புகழ்பெற்றவர்.
Also Read | "என் பையன் இன்னொரு பொண்ணோட Lifeல விளையாடிற கூடாது!".. பேட்டியில் அழுத சீரியல் நடிகை..
மாமன் மகள், சூர்ய வம்சம், பாட்ஷா, பணக்காரன், அஞ்சலி என பல படங்களில் நடித்தவர் பாஷாவில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியாக பேட்டி கொடுத்திருக்கும் நடிகை சத்யபிரியா, “என்னதான் சீரியலில் நடித்து கொண்டிருந்தாலும், நாங்கள் எல்லாம் சினிமாவில் தோன்றி வந்தவர்கள். ஆனால் தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தும் சினிமாவில் அம்மா கேரக்டர் என்பது குறைந்துவிட்டது.
மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு பிறகு பாட்டி கேரக்டர் குறைந்து விட்டது. தற்போது அம்மா கேரக்டர்களும் பல திரைப்படங்களில் காண முடிவதில்லை. அது ஒன்றுதான் குறை!” என்று தற்கால சினிமாவில் வயதுமிக்கவர்களுக்கான கதாபாத்திர தட்டுப்பாடு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதனிடையே தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யப்ரியா முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துவருவது குறித்தும் அதே இயக்குநரின் கோலங்கள் சீரியலில் பல வருடம் முன்பு நடித்தது குறித்தும் சிலாகித்து பேசும்போது, “கோலங்கள் சீரியல் எனக்கு இன்னொரு வாழ்க்கை கொடுத்தது என சொல்ல முடியாது, ஆனால் என் கரியருக்கு ஒரு பெரும் பூஸ்டராக அமைந்தது.
7 வருடம் ஒரு சீரியலில் அபி அம்மாவாக நடித்தது இன்னும் பலரிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அத்துடன் இன்னும் பலர் கோலங்கல் சீரியலை தற்போது பார்த்து வருகின்றனர். அவர்களிடமும் நல்ல மதிப்பு உண்டாகிறது.
அதன் பிறகு எவ்வளவோ சிரியல் நடித்துவிட்டாலும் தற்போது எதிர்நீச்சல் சீரியல் அப்படி ஒரு வரவேற்பைக் கொடுத்துள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Pandiayn Stores ஏன் ஒத்துகிட்டீங்க.. சுயமரியாதை எங்க போச்சு ?".. ரசிகரின் கேள்வி.. VJ தீபிகா Bold Reply.!