சமீபத்தில் தமிழக அரசு நடிகர்கள், நடிகைகள், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்நிலையில் பிரபல நடிகை சங்கீதாவிற்கு இந்த வருடம் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலைமாமணி விருதுடன் அவர் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நடிகை சங்கீதா 1998ஆம் ஆண்டு சூர்யா, முரளி நடிப்பில் வெளியான 'காதலே நிம்மதி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' தான். பிதாமகன் படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதும், துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Priyanka: தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளிலும் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார் என்று சொல்லலாம். நடிகர் கமல் உடன் துணைக் கதாபாத்திரத்தில் அவர் நடித்த மன்மதன் அம்பு படமும் அவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இந்நிலையில் நடிகை சங்கீதா கடைசியாக நெருப்புடா என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் 2009ஆம் வருடம் பாடகர் கிரிஷ் என்பவரை திருவண்ணாமலை கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஷிவ்யா என்ற மகளும் உள்ளார். பாடகர் கிரிஷ் கௌதம்மேனன் இயற்றிய வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற 'மஞ்சள் வெயில்' பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் அழகிய அசுரா, கோ, முப்பரிமாணம் போன்ற சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ நடுவராக பணியாற்றி வருகிறார். சங்கீதாவிற்கு கலைமாமணி விருது கிடைத்ததை அவரது கணவர் கிரிஷ் பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.