பிரபல நடிகை தனது சீமந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் சமீரா ரெட்டி. இவர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த இவர், திருமணமான பின்னர், நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். தற்போது பிசியான குடும்பத் தலைவியாக, இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரு பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு, அவரது சீமந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''இதற்கு ஒரு கேப்ஷன் சொல்லுங்க. எனது சீமந்த விழாவின் புகைப்படத்தில் இதை கண்டறிந்தேன். அப்போது நான் 8 மாத கர்பத்தில் இருந்தேன். இந்த புகைப்படம் குறித்து எனக்கு எந்த நினைவுமே இல்லை'' என பதிவிட்டுள்ளார்.