தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரிச்சா. இந்த படத்தில் அவரது நடிப்பு விமசகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு மிக போல்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதே நேரம் சிம்புவுடன் இணைந்து 'ஒஸ்தி' படத்தில் கமர்ஷியல் ஹீரோயினாக கலக்கினார். ரிச்சா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து அவர் படிப்பில் கவனம் செலுத்திய அவர் மேற்படிப்பிற்காக அமரிக்கா சென்றார். இந்நிலையில் தன்னுடன் பிசினெஸ் ஸ்கூலில் உடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அவருக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் அவரது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Late on Twitter 😜 but happy belated birthday to my soulmate, best friend, quarantine buddy and ride or die man for life! 💜💖🎂🎈https://t.co/Kz6uSxEqnQ pic.twitter.com/M1x8QSGTot
— Richa Langella (Gangopadhyay) (@richyricha) August 26, 2020