இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டரில் 'ஷேம் ஆன் விஜய் சேதுபதி' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வந்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராதிகா தற்போது முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "முத்தையா முரளிதரன் வாழ்க்கை சம்பத்தமான படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லையா. அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தமிழரின் சன்ரைசர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் எப்படி இருக்கிறார் என்று அந்த அணியைக் கேட்கலாமே. விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகனை கட்டுப்படுத்தாதீர்கள். விஜய் சேதுபதி மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் முட்டாள்தனங்களைத் திணிக்காதீர்கள்" என்று கூறினார்.
மேலும் அவர் "சன்ரைசர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்கள் இருவருக்குமே அரசியல் பின்புலம் இருந்தாலும் கூட இத்தனை ஆண்டுகளாக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு என அவர்கள் ஒவ்வொன்றையும் அதற்கான மரியாதையுடன் கையாண்டுள்ளனர். அதேபோல் ஏன் நமது சினிமாத் துறையால் கையாள முடியவில்லை. கலையை அரசியல் பார்வையில் இருந்து பார்க்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
#muthaiyamuralitharan biopic &asking @VijaySethuOffl not to act😡do these people hav no work??why not ask @SunRisers why he is the head coach, team belongs to a Tamilian with political affiliations?VSP is an actor, and do not curb an actor. VSP&cricket both don’t warrant nonsense
— Radikaa Sarathkumar (@realradikaa) October 16, 2020
The owners of #Sunrisers, & #SunTV, though they have political affiliations, all these decades they could distinctly & professionally handle politics, sports & entertainment with due credits. Why not our film industry look at entertainment away from political view point. 1/2
— Radikaa Sarathkumar (@realradikaa) October 16, 2020