பிரபல திரைப்படங்களில் நடித்த நடிகையும் தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருபவருமான ப்ரியா ராமன் தமது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "இன்ஸ்டாகிராமில் அனைவரும் இத்தனை பேஜ்கள் மூலம் கவுண்ட் டவுன் எல்லாம் செய்து என் பர்த்டேவை கொண்டாடி எனக்கு பெரிய அன்பை கொடுத்துள்ளீர்கள். எனக்கு வார்த்தைகளே வரவில்லை. எமோஷனலாக இருக்கு.
அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. என்றுமே நான் உங்கள் செல்லக்குட்டி தான். என்றுமே உங்கள் டார்லிங் தான்.. என்னைக்குமே உங்கள் ப்ரியா மேம் தான். உங்கள் அனைவரையும் சந்தித்து உணவு சாப்பிடவும் கேக் சாப்பிடவும் எண்ணினேன். ஆனால் பாண்டமிக் சூழலில் அது முடியவில்லை. கோடி நன்றிகள். லவ் யூ ஆல்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரும் தற்போது செந்தூரப் பூவே எனும் சிரீயலில் ஹீரோவாக நடித்து வருபவருமான ரஞ்சித்தும் அவரது மனைவியான ப்ரியா ராமனும் சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி தகவலை அண்மையில் தான் நடிகர் ரஞ்சித் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ALSO READ: 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் அடுத்த 2 படங்கள்!! .. பட்டையை கிளப்பும் தகவல்கள்!