நடிகை பூனம் பாஜ்வா முதல்முறையாக தனது காதலரை பற்றி மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கி வருபவர் பூனம் பாஜ்வா. சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெனாவெட்டு, துரோகி, அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வாழ்க்கைத்துணை குறித்து பதிவிட்டுள்ளார். சுனில் ரெட்டி எனும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள பூனம், அவருடனான காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
மேலும் இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் பூனம் பாஜ்வாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் அடித்து வருகிறது.