சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அன்பறிவ் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் பீஸ்ட் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி உள்ளன. பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் தான் நடித்து முடித்து விட்டதாக நடிகை பூஜா ஹெக்டே பேசும் வீடியோவை சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் "'பீஸ்ட்' படத்தில் பணிபுரிவது மிகவும் சிறப்பாக இருந்தது, ஏனென்றால் எல்லோரும் மிகவும் கலகலப்பாக இருப்பார்கள், நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது அது ஒரு விடுமுறை கொண்டாட்டம் போல் இருந்தது. நாங்கள் படத்தை மிகவும் விரும்பி தயாரித்துள்ளோம். நீங்களும் படம் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். பொதுவான நெல்சன் மற்றும் விஜய் ஸ்டைலில் இந்தப் படம் பொழுதுபோக்காக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இன்று ‘பீஸ்ட்’ படத்திற்கான எனது கடைசி நாள், இன்றுடன் எனது பகுதிக்கான படப்பிடிப்பு முடிவடைகிறது, ”என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
கடந்த வாரம், பீஸ்ட் டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021