நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சூப்பர் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அல வைக்குந்த புரமளோ படத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''இந்த லாக்டவுன் நேரத்தில் நடந்த சிறந்த விஷயம், நான் காக்கைகளுக்கு உணவு கொடுத்து, அவற்றின் குணாதிசயங்களை அறிந்து கொண்டதுதான். ஆரம்பத்தில் அவை என்னை நம்பி வரவில்லை. இப்போது எனது கைகளால் உணவு கொடுக்கிறான். அவற்றுக்கு தண்ணீர் வைக்கிறேன். இப்போதெல்லாம் கரக்க்ட்டாக நான் வரும் நேரத்தில் அவை எனக்காக காத்திருக்கின்றன.இப்போது காக்கைகளின் மேல் எனக்கு தனி காதல் ஏற்பட்டுள்ளது'' என பதிவிட்டுள்ளார்.