மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாக பாபுவின் மகள் நிஹரிகா கொனிடேலா. இவர் தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைதன்யா என்பவருடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து என்னுடையவர் என்று குறிப்பிட அவை வைரலானது. இருவருக்கும் இன்று (13/08/2020) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், வருண் தேஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.