www.garudavega.com

விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா! வைரலாகும் CUTE ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பரிசுகளை வழங்கி கொண்டாடினர்.

Actress Nayanthara and Vignesh Shivan Celebrating Valentines Day

லிங்குசாமி இயக்கும் புதிய படம்! கீர்த்தி ஷெட்டியின் FIRST LOOK போஸ்டர்! எப்படி இருக்கு தெரியுமா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் காட்பாதர் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார் என செய்திகள் வெளியானது.

http

 

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகங்களில் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் " காத்துவாக்குல ஒரு காதல்" என கேப்சன் போட்டு, "சுற்றியுள்ள அனைத்து அன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!  காதல்! அதுவே இந்த வாழ்க்கையை நிறைவு செய்கிறது.... எனவே! காதலிக்கவும் மற்றும் நேசிக்கப்படுவதற்கும் நேரமும் ஆர்வமும் வேண்டும்!" என காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தழுவி காதலர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது.

OFFICIAL: யுவன் இசையில் வெற்றிமாறன் - அமீர் இணையும் புதிய படத்திற்கு பரபரப்பான புதிய பெயர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nayanthara and Vignesh Shivan Celebrating Valentines Day

People looking for online information on Just Like the First Time, Nayanthara, V-day, Valentines Day, Vignesh shivan will find this news story useful.