உலகம் முழுவதும் கொரோனா நோயினால் நடுங்கி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர்.
வேலை செய்பவர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் தொற்றும் வியாதி என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. தமிழ்நாடு அரசு இன்று 24.03.2020 முதல் 31.03.2020 வரை 144 தடை சட்டம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகை நமீதா ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் வனவிலங்கு சாலைகளில் இருக்கும் மிருகங்களுக்காக அவர் கூறியிருப்பது,"இப்போ தெரிகிறதா. நான் எந்த வனவிலங்கு சாலையையும் ஆதரிக்கவில்லை. மாறாக யாரையும் அங்கு போக கூட பரிந்துரைப்பதில்லை. இப்படி வீட்டிற்குள் கொஞ்ச நாள் முடங்கி இருப்பதே வேதனையாக இருக்கிறதே. அவங்களுக்கும் அப்படி தான இருக்கும். மிருகங்கள் நமக்காக வாழவில்லை, நம்மோடு வாழ்கின்றன" என்று கூறியுள்ளார்.