நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.
கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது. இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அவரது வளைகாப்பு விழாவில், சிரஞ்சீவி சார்ஜா இருப்பது போன்ற ஒரு கட் அவுட்டை வைத்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மறைந்த சிரஞ்சீவ் சார்ஜாவின் தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேக்னா, ''நீ எப்படி எனக்கு பக்கபலமாக நிற்கிறாயோ, நானும் உனக்கு அப்படி பக்கபலமாக இருப்பேன். இது சத்தியம். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எப்போதும் சிருவை போல சிரித்து கொண்டே இருக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மேக்னாவின் வளைகாப்பில், அவரது கணவர் துருவ் அவரை தாங்கி நடப்பது போல வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.