www.garudavega.com

அவங்கள ரொம்ப 'சோதிக்காதீங்க'... ஜூனியர் 'சிருவுக்காக' ரசிகர்கள் பிரார்த்தனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. சிருவின் மரணத்தின் போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

Actress Meghana Raj and Son test Positive for COVID-19

சிரஞ்சீவி மகன் வடிவில் மீண்டும் வந்து விட்டதாக மேக்னாவும் அவரது குடும்பத்தினரும் கொண்டாடினர். இந்த நிலையில் மேக்னா தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், '' என்னுடைய அப்பா, அம்மா, நான் மற்றும் ஜூனியர் சிரு ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம்.

 

நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஜூனியர் சிருவும் நலமாக இருக்கிறார். குடும்பமாக நாங்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றியுடன் திரும்புவோம்,'' என தெரிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிருவின் குடும்பத்தை அதிகம் சோதிக்க வேண்டாம் என்றும், விரைவில் அவர்கள் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

Actress Meghana Raj and Son test Positive for COVID-19

People looking for online information on Meghana Raj will find this news story useful.