90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.
குழந்தை நட்சத்திரமாகவும் தென்னிந்திய மொழிகளில் முத்திரை பதித்தவர். மீனா, , ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்திருக்கிறார். மலையாள மொழியில் மோகன்லாலுடன் இவர் நடித்த திரிஷ்யம் படம் இதில் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு கணினி பொறியாளார் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
கணவர் மறைந்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து நடிகை மீனா மீண்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, சமீபத்தில் தனது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர், குடும்பமாக வந்து நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை மீனா இன்று உட உறுப்பு தான நாளை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வழிகளில் ஒன்றாகும்.
இது ஒரு வரப்பிரசாதம், நாட்பட்ட நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு, நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். எனது வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய அதிகமான நன்கொடையாளர்களுடன் எனது சாகர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க விரும்புகிறேன்! ஒரு நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் மட்டுமல்ல. இது குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களை பெரிதும் பாதிக்கிறது.
இன்று எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். உங்கள் பாரம்பரியத்தை வாழ வைக்க சிறந்த வழி" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.