தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தென் இந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா.
Also Read | "இன்னும் 14 நாள் தான் இருக்கு.." மீனாவின் பழைய இன்ஸ்டா நினைவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்
ரஜினி, கமல், அஜித், மோகன்லால், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட தென் இந்தியாவின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள மீனா, தற்போது வரை திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது கணவரான வித்யாசாகர் நேற்று (28.06.2022) நுரையீரல் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
அது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரையுலகினரும் மீனாவின் வீட்டிற்கு வந்து, அவரது கணவர் வித்யாசாகருக்கு அஞ்சலியை செலுத்தி விட்டுச் சென்றனர். ரஜினிகாந்த், குஷ்பூ, சினேகா, மன்சூர் அலி கான், கே.எஸ். ரவிக்குமார், சேரன், சுந்தர். சி, கலா மாஸ்டர், ரம்பா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். தொடர்ந்து, வித்யாசாகரின் இறுதி சடங்குகளும் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில், மீனாவின் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள், வித்யாசாகரின் இழப்பு குறித்து தெரிவித்துள்ள கருத்து, மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
ரொம்ப நல்ல மனசுப்பா..
இதுகுறித்து, அப்பகுதியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி ஒருவர் பேசுகையில், "அவர் இறந்தது பற்றி அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. காரில் போகும் போது வணக்கம் என்று கூறினால், பதிலுக்கு வணக்கம் என சொல்லி விட்டு, காரை நிறுத்தி பேசிக் கொண்டும் செல்வார். அவர் மிகவும் நல்ல குணம் உடையவர்" என தெரிவித்தார்.
என் பையன் இறந்த மாதிரி இருக்கு..
அதே போல, அப்பகுதியில் மீன் விற்பனை செய்யும் பெண் ஒருவர் பேசுகையில், "அவர் மிகவும் நல்ல குணம் உடையவர். இறந்த தகவல் அறிந்ததும், மிகுந்த வேதனையாக உள்ளது. மீன் விற்பனை செய்யக் கூட எனக்கு தோன்றவில்லை. எனது மகன் இறந்து போன மாதிரி உள்ளது. நிஜமாகவே வியாபாரம் செய்ய தோன்றவில்லை. அவ்வளவு கண்ணீர் வருகிறது" என கூறினார்.
சிரிச்ச முகத்தோட தான் இருப்பாரு..
மேலும் பேசிய பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர், "இந்த வழியாக போகும் போது, கை காமித்த படி எப்போதும் சிரித்த முகத்துடன் தான் செல்வார். அப்படி இருக்கும் ஒருவர், இறந்து போன விஷயம், உண்மையில் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. விஷயத்தை கேள்விப்பட்டதும் ஒரு இனம் புரியாத சோகம். அடிக்கடி பார்க்கும் ஒருவர், எப்போது சிரித்த முகத்துடன் கடந்து செல்பவர், இறந்து போனதால் இனிமேல் மீனா எப்படி இருப்பார் என்பதை நினைக்கவே வேதனையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதே போல வேறு சிலரும், வித்யாசாகர் நல்ல கேரக்டர் உடையவர் என்றும், அவருக்கு போய் இப்படி ஆகி விட்டதே என்றும் வேதனையில் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இது தொடர்பான முழு வீடியோவைக் காண: