www.garudavega.com

"ஆழ்ந்த துக்கம்..".. கணவர் மறைவுக்கு பின் முதல்முறை மனம் திறந்த மீனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் நடிகை மீனா.

Actress meena emotional insta post after her husband demise

Also Read | விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல'.. வீடியோ வடிவில் வெளியான முழு பாடல்! போடு ஆட்டத்த

தொண்ணூறுகளில், தென் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா, தற்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும், மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமாகி இருந்தது.

நேரில் வந்த பிரபலங்கள்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், நுரையீரல் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம், மீனாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரை உலகினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், குஷ்பு, ரம்பா, சினேகா, கலா மாஸ்டர், சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து தங்களின் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

Actress meena emotional insta post after her husband demise

மீனா வெளியிட்ட அறிக்கை

மேலும், கணவரின் இறுதி சடங்கின் போது, கண்ணீர் விட்டு துடித்த மீனாவைக் கண்டு பலரும் மனம் உடைந்து போனார்கள். இந்நிலையில், தனது கணவர் மறைந்த பிறகு, முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கோரிக்கைகள் மற்றும் நன்றிகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress meena emotional insta post after her husband demise

ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேன்..

அவரது பதிவில், "எனது அன்பு கணவர் வித்யாசாகரின் மறைவால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பைத் தந்து, இந்த சூழலில் அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பில் இனியும் தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கவும். இப்படி ஒரு கடினமான நேரத்தில், எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Actress meena emotional insta post after her husband demise

மேலும், தங்களால் இயன்ற வரை முயற்சி செய்த அனைத்து மருத்துவ குழுவினருக்கும், எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள், ஊடகத்தினர் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை செய்த எனது அன்பான ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மீனா குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Rocketry திரைப்படத்தில் வரும் அப்துல் கலாம் கதாபாத்திரம்.. தியேட்டரில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress meena emotional insta post after her husband demise

People looking for online information on Meena, Meena emotional insta post, Meena Husband, Meena husband passed away, Vidyasagar will find this news story useful.