கோலங்கள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் இயக்குனர் திருச்செல்வம். சுமார் 6 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடரில், நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
இதனிடையே, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல்
அது மட்டுமில்லாமல், தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் தொடராகவும் எதிர்நீச்சல் இருப்பதால், தொடர்ந்து இந்த தொடரில் வரும் காட்சிகள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசியும் வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், எதிர்நீச்சல் தொடர் குறித்து பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners
அதே போல, குறிப்பாக நடிகர் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் வரும் குணசேகர் தொடர் மூலம் மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் பல விஷயங்களையும் மனம் திறந்து பேசி இருந்தார் நடிகை மதுமிதா. மேலும், எதிர்நீச்சல் மூலம் தனக்கு கிடைத்த மக்கள் வரவேற்பு பற்றியும் பல விஷயங்களை அவர் மனம்திறந்து பேசி இருந்தார்.
அப்படி இருக்கையில், மற்ற சீரியல்களுக்கும், எதிர்நீச்சல் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் சில விஷயங்களை விளக்கி உள்ளார் மதுமிதா.
எதுக்கு இவ்ளோ ஓவர் ஆக்டிங்?...
எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசி இருந்த நடிகை மதுமிதா, "நான் முன்னாடி சீரியல் பண்ணும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் நிறைய பண்ண சொல்லுவாங்க. நான் அப்படித்தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.
Images are subject to © copyright to their respective owners
ஆனா இங்க ஃபுல்லா நேச்சுரலா இருக்கு. நான் முதல் தடவை பண்ணும் போது திருச்செல்வம் சார் பயந்துட்டாரு, 'எதுக்கு மா இவ்வளவு ஓவர் ஆக்டிங் பண்றே, அது எல்லாம் வேணாம். இந்த கேரக்டரை நீங்களா நினைச்சுட்டு உங்க வாழ்க்கையில் எப்படி நீங்கள் ரியாக்ட் பண்ணுவீங்களோ அந்த மாதிரி பண்ணுங்க' -ன்னு சொன்னாரு. அது கொஞ்சம் வித்தியாசமா இருக்குன்னு தோணுச்சு.
மக்கள் கனெக்ட் ஆகிக்கிட்டாங்க..
ஜனனி (எதிர்நீச்சல் கதாபாத்திரம்) நிஜமாவே சக்தியை ஹிட் பண்ணா எப்படி ஆகும். மாமியார் திட்டுனா எப்படி ஆகும்? அப்ப இதெல்லாம் நிஜ வாழ்க்கையில கொஞ்சம் அப்ளை பண்ணிட்டு அந்த கேரக்டர் பண்றதுக்காக போவேன். நான் தெலுங்குல மட்டும் இல்லாம தமிழ்லயும் முன்னாடி ஒரு சீரியல் பண்ணி இருக்கேன்.
எல்லா சீரியல்லையும் நார்மலா ஓவர் ஆக்டிங் தான் இருக்கும். ஆனா இந்த சீரியல்ல பார்க்கும் போது எனக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு. எல்லா சீரியல்லையும் ஹீரோயின் அப்புறமா நெகட்டிவ்வா வர்றவங்க இதுல மட்டும் தான் கவனம் செலுத்துவாங்க. ஆனா இந்த சீரியல்ல எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. ஈஸ்வரி அக்கா, நந்தினி அக்கான்னு எல்லா கேரக்டருக்கும் மக்கள் கனெக்ட் ஆகிக்கிட்டாங்க.
Images are subject to © copyright to their respective owners
எல்லாரையும் விட மாரிமுத்து சார் ரொம்ப ஃபேமஸ். வெளிய எங்கயாவது போனா கூட அவர எல்லாரும் அப்படி திட்டுவாங்க. அவரை அடிப்போம், அது, இதுன்னு அசிங்க அசிங்கமா திட்டிருக்காங்க" என நடிகை மதுமிதா கூறினார்.