ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, கல்யாணம் சமையல் சாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்கடன்.
Behindwoods Tv-க்காக VJ தாரா அவரை பேட்டி எடுத்து பல சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டார். மடை திறந்த வெள்ளம் போல அக்கேள்விகளுக்கு வெகு அழகாக பதில் சொன்னார் லேகா. அவர் கூறியவற்றுள் ஒரு சில துளிகள்
'தமிழ்ல குறிப்பிட்டு சொல்ற மாதிரி படங்கள்ல நடிச்சது சந்தோஷம். தமிழ் தவிர தெலுங்குல நான் நடிச்ச படம் வேதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சினிமா இப்ப நிறைய மாறியிருக்கு. டெக்னாலஜி, மைண்ட் செட், பிஸினெஸ் விஷயங்கள்னு எல்லாமே மாறியிருக்கு. எனக்கும் பட டைரக்டருக்கும் ஒருபோதும் பிரச்சனை வந்ததில்லை. ஐடியாஸ் க்ளாஷஸ் எல்லாம் ஆனதில்லை. நாம ஒரு ஆர்ட்டிஸ்ட் ஒரு நடிகையா நாம ஒருத்தங்களோட விஷன்ல ஒரு பகுதியா இருக்கோம். டைரக்டர் தான் கேப்டன். இதுவரைக்கும் செட்ல எல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.
பத்து வருஷங்களுக்கு முன்னால பெண்களுக்கு சரியா ரோல்ஸ் இல்லை. ஹீரோயின்னா ஒரு குட் கேர்ள் இமேஜ் இருந்தது. பெண்களை ரெண்டு விதமா காட்டுவாங்க நல்ல பெண்கள் - கெட்ட பெண்கள். இப்ப அது அவுட்டேட்டட் ஆகிடுச்சு. இப்ப பெண்களை வீக்கா ஒண்ணும் தெரியாதவங்களா காட்ட முடியாது.
அதோட பெண்களை சும்மா செட் ப்ராபர்ட்டி மாதிரி பயன்படுத்த முடியாது.’ இது போன்ற ஆழமான கருத்துக்களையும் தன்னுடைய அனுபவங்களை கூறியுள்ளார் லேகா. முழு வீடியோவையும் பார்க்க