மலையாள சினிமாவில் கேரக்டர் ரோலில் நடித்து வந்தவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.
Also Read | கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக தீபிகா படுகோனே.. சிவப்பு கம்பளத்தில் அசத்தல் என்ட்ரி!
2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் என அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.
அத்ற்கு பின், "றெக்க" படத்தில் நடித்தார். பிறகு சில வருடங்களுக்கு பிறகு இவர் பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் விரைவில் வெளிவர உள்ளது. சமீபத்தில் கொம்பன், குட்டிப்புலி, மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. கடைசியாக AGP படத்தில் நடித்திருந்தார்.
Female Schizophrenia தமிழ் படமான "ஏஜிபி - Schizophrenia" படத்தில் Schizophrenia எனும் மன நோய் பாதித்தவராக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது புதிய லுக்குடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவ்வப்போது குச்சுப்புடி நடனமாடும் வீடியோ, போட்டோ ஷூட் போட்டோக்களை லட்சுமி மேனன் பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதே போல் இந்த புதிய லுக் வீடியோவுக்கும் நல்ல வரவேற்பு நிலவுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8