பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "உங்களால் என் குழந்தை பருவம்".. இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு A.R. ரஹ்மான் இரங்கல்!
இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய திரைப்படங்களாகும்.
நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விஸ்வநாத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பு உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,"நாம் மேலும் ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். அவர் ஒரு லெஜெண்ட். கே.விஸ்வநாத் அவரது கலை மற்றும் திரைப்படங்களை புரிந்துகொள்வது குறித்த அவருடைய ஆர்வத்திற்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு ஒருமுறைகூட எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அவருடைய படைப்புகளின் தீவிர ரசிகை. ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
We have lost another gem! What a legend! #KVishwanath gaaru will be remembered forever for his art, his passion and understanding of films. Never got an opportunity to work with him, but been a great admirer of his work. Will be missed.
RIP #KVishwanathgaru
Om Shanti 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/HNxvrELJnt
— KhushbuSundar (@khushsundar) February 3, 2023
Also Read | "என் மாஸ்டருக்கு சல்யூட்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. கமல்ஹாசன் உருக்கம்..!