தமிழ் சினிமாவில் 'ஜெமினி' படம் மூலம் அறிமுகமானவர் ஹிந்தி நடிகை கிரண் ரத்தோட். இவர் தமிழில் நடித்த வில்லன் அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் 'திருமலை' படத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் ஆடிய 'வாடியம்மா ஜக்கம்மா' பாடல் மிகவும் பிரபலமானது.
சில காலம் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அவர் மீண்டும் 'ஆம்பள' படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதற்கு பல ரசிகர்களும் ஆதரவளித்து வந்த நிலையில். சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் "என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு, எனது பதிவுகளை பின் தொடருபவர்கள் எனக்கு ரசிகர்கள் என்றே பொருள்" என்று வெளிப்படையாக சாடியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் " 39 வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கீங்கோ" என்று பாராட்டி வருகின்றனர்.