நடிகை கியாரா அத்வானி ஜெர்ஸி படத்தை விமர்சனம் செய்துள்ளார்.
ஷாகித் கபூர், நடிகர்கள் பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீம் ஆகியோரின் மகன், உத்தா பஞ்சாப், ஹைதர், ஜப் வீ மெட், "பத்மாவத்", இஷ்க் விஷ்க் மற்றும் கியாரா அத்வானியுடன் இணைந்து நடித்த கபீர் சிங் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.
ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெர்ஸி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கவுதம் தின்னானுரி இயக்கத்தில் கிரிக்கெட் வீரராக நானி நடித்த தெலுங்கு திரைப்படம் ஜெர்ஸியின் ரீமேக் ஆகும். இந்த தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.
இப்படத்தில் பிரம்மாஜி, சுப்பாராஜு, சத்யராஜ், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இந்த படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது இந்தியில் இந்த படம் ஷாகித் கபூர் & மிருணாள் தாகூர் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது.
முன்னதாக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் ஷாகித் கபூர். அதையடுத்து இப்போது அவர் நடிப்பில் ஜெர்ஸி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதமே இயக்கியுள்ளார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரமே ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் ஒரு வாரம் தாமதமாக தற்போது ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார் அனிருத். மேலும் சில பாடல்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த நடிகை கியாரா அத்வானி இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், "என் அன்பான SK, நீங்கள் ரொம்ப ஸ்பெஷல், அர்ஜுன் கதாபாத்திரம் மாயாஜாலமாக உள்ளது, கிரவுண்டுக்கு வெளியே நீங்கள் பந்தை அடித்துள்ளீர்கள், மேலும் ஜெர்சி படத்தின் வெளியீட்டுக்கு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த அழகான படத்திற்காக இயக்குனர் கௌதம் நாயுடுவுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/