நடிகை குஷ்பு தனது கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இதுமட்டுமின்றி அரசியல், சின்னத்திரை சீரியல், ரியாலிட்டி ஷோ என பல்வேறு துறைகளில் கலங்கி வந்தார் இவர். தற்போது குஷ்பூ ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது கொரோனா வைரஸ் டெஸ்ட் முடிவுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''பாதுகாப்பு கருதி மூன்றாவது முறையாக நான் கோவிட் பரிசோதனை மேற்கொண்டேன். காரணம் நான் சில பயணங்களை மேற்கொண்டு, சில கூட்டங்களில் பங்கேற்றேன். இம்முறையும் கொரோனா வைரஸ் நெகட்டீவ் என்றே வந்திருக்கிறது. உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.
I got tested for #Covid for the 3rd time as a precautionary measure as I have been traveling and been in crowds. Have tested negative again. Thanks to your goodwill and blessings. 🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) October 22, 2020