இன்று உலக யோகா தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பலரும் தாங்கள் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | “ஆசியாவிலேயே திறமையான இயக்குனர்…” நெல்சன் பிறந்தநாளில் விக்னேஷ் சிவனின் அன்பு வாழ்த்து
கீர்த்தி சுரேஷ்…
பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷோடு நடித்த தொடரி’ திரைப்படம் அவருக்கு அடையாளத்தைப் பெற்று தந்தது. பின்னர் தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையானார்.
சமீபத்தைய படங்கள்…
அதன் பின்னர் விஜய்யுடன் பைரவா சர்கார், சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த, சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், வாஷி உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.
யோகா தினம்…
இந்நிலையில் இன்று உலக யோகா தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அதில் பங்குபெறும் விதமாக தான் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இப்போது வைரலாகிவருகிறது.
Also Read | மோகன்லாலின் சூப்பர்ஹிட் ‘திரிஷ்யம் 2’ இந்தி ரீமேக்… அஜய் தேவ்கன் வெளியிட்ட ரிலீஸ் update