www.garudavega.com

திருமணம் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி.. கீர்த்தி சுரேஷ் அளித்த செம்ம பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh answer about her Marriage

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.5 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி, தசரா படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Actress Keerthy Suresh answer about her Marriage

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ரசிகர்களை கடந்ததை தொடர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "உங்கள் திருமணம் குறித்து சொல்லுங்கள்" என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலுவின் இங்கிலீஷ்காரன் படத்தின் உள்ளே ஒன்னுமில்லை என்ற மீமை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Keerthy Suresh answer about her Marriage

People looking for online information on Keerthy Suresh will find this news story useful.