விழுப்புரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீயின் மறைவு குறித்து நடிகை கஸ்தூரி கண் கலங்க பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில்,ஜெயயபால், ராஜி தம்பதியரின் மூத்த மகளான சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. கவுன்சிலர் முருகன் மற்றும் கலியப்பெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார், சிறுமி ஜெயஸ்ரீ. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இச்சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ளார். அப்போது அவர் ஜெயஶ்ரீ மரண வாக்குமூலத்தின் வீடியோ பற்றி பேசிய போது, தொடர்ந்து பேச முடியாமல் கண் கலங்கினார். ''அந்த பொண்ணை பார்க்கும் போது என் பொண்ணை பார்க்குற மாதிரி இருந்துச்சு, நாளைக்கு என் பொண்ணுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பு இல்லாத சமூகம் தான் இருக்கான்னு பயமா இருக்கு, அந்த குழந்தை சாகும் போது கூட குழந்தையா, அப்பாவியா செத்து போயிட்டா'' என கலங்கிய இவர், இப்படி ஒரு வீடியோ ஆதாரம் இருக்கும் போது, இதை லேட் பண்ணக்கூடாது. இதுக்கு காரணமானவங்களுக்கு உடனடியா அதிகபட்ச தண்டை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.