www.garudavega.com

''எனக்கு வனிதா பேரை கூட சொல்ல புடிக்கல.. யாரு SHAMELESS.?!'' - கஸ்தூரி பளார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில் நடிகை கஸ்தூரி தனது வெளிப்படையான பதில்களை தெரிவித்துள்ளார். 

வனிதா திருமண விவகாரம் - கஸ்தூரி பளார் | actress kasthuri blasts on vanitha vijaykumar peterpaul marriage

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இதனிடையே நடிகை கஸ்தூரி பதிவிட்ட ட்விட்டர் பதிவு, வனிதாவை தாக்கும் விதமாக அமைந்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். 

இதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தனது பளீச் பதில்கள் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''எனக்கு வனிதா விஜயகுமார் விஷயத்தை பற்றி பேசவே பிடிக்கவில்லை. அவர் பெயரை கூட சொல்ல எனக்கு பிடிக்கவில்லை. நான் போட்ட பதிவில், வனிதாவின் பெயர் கூட இருக்காது. அது நான் பொதுவாக பதிவிட்ட கருத்து. நான் அவரைதான் தாக்கினேன் என சொல்லி, என்னை அது, இது என அவர் பேசுவது தவறானது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அவர் மீது உள்ள அக்கறையில் தான் பேசினார்'' என அவர் தெரிவித்தார். 

மேலும் தயாரிப்பாளர் ரவிந்தரை Shameless என சொல்லியதை கண்டித்தும், நெட்டிசன்களும் வனிதா எடுத்த முடிவை அளவுக்கடந்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதை கண்டித்தும் பேசினார் கஸ்தூரி. 

இதுகுறித்து பேசிய அவரின் முழு வீடியோ இதோ. 

''எனக்கு வனிதா பேரை கூட சொல்ல புடிக்கல.. யாரு SHAMELESS.?!'' - கஸ்தூரி பளார். வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா திருமண விவகாரம் - கஸ்தூரி பளார் | actress kasthuri blasts on vanitha vijaykumar peterpaul marriage

People looking for online information on Kasthuri, Vanitha, Vanitha Vijaykumar Peter Paul Marriage will find this news story useful.